பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் கட்சி பேஸ்புக் முடக்கம்

இஸ்லாமாபாத்:

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் புதிய கட்சி தொடங்கினார். இந்த கட்சியின் பெயரில் இருந்த பேஸ்புக் பக்கம், கணக்குகள் முடக்கப்பட்டன.

தேர்தலில் பேஸ்புக் தலையீடு இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகளின் போலி பக்கங்களை நீக்குவதாக பேஸ்புக் நிறுவனம் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்திருந்து. இந்த வகையில் ஹபீஸ் கட்சியில் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் உரிய காரணம் இன்றி முடக்கப்பட்டுள்ளது’’ என்றார்.