டிக்டாக் செயலியின் மீது பாய்ந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்!

நியூயார்க்: மக்களின் போராட்டங்களை சென்சார் என்ற பெயரில் மறைத்து, சீன அரசின் கையாளாக செயல்படும் டிக்டாக் செயலியின் சேவை நமக்குத் தேவையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க்.

ஏற்கனவே சிந்தனை வறட்சியில் சிக்கித் தவிக்கும் மற்றும் சிந்திக்க மறுக்கும் இன்றைய இளைய தலைமுறையினரை டிக்டாக் போன்ற செயலிகள் இன்னும் மொந்தையாக்குகின்றன என்ற குற்றச்சாட்டுப் பரவலாக உள்ளது.

இந்நிலையில் இதேக் கருத்தை ஃபேஸ்புக் நிறுவனரும் தெரிவித்துள்ளார். டிக்டாக் செயலியில் அரசுகளின் அராஜகங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் சென்சார் என்ற பெயரில் நீக்கப்பட்டு விடுகின்றன.

இந்நிலை அமெரிக்காவிலும் தொடர்வதால், மக்களின் போராட்டங்கள் வெளியாவதில் சிக்கல் உள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற எங்களின் சேவைகளில் வலுவான தனியுரிமைப் பாதுகாப்புகள் இருக்கின்றன. இதனால் போராட்டக்காரர்கள் பயன்படுத்த முடிகிறது.

டிக்டாக் செய்யும் வேலைகளை எல்லாம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சென்சார் என்ற பெயரில் உண்மைகளை மறைப்பதற்காக, சீன அரசின் கையாளாகவே டிக்டாக் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சேவை நமக்குத் தேவையா?” என்றார் மார்க் ஜக்கர்பெர்க்.

கார்ட்டூன் கேலரி