பேஸ்புக் மூலம் பெண்களிடம் நெருக்கமாகி ஆபாச படம்! சென்னை இளைஞர் கைது!

சாம்வேல்
சாம்வேல்

சென்னை:

பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல். வயது 22.

இவர், முகநூல் எனப்படும் பேஸ்புக் மூலம், பெண்களிடம் நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது.  . பிறகு, தனது நண்பர்களின் உதவியோடு சம்மந்தப்பட்ட பெண்களிடம் ஆபாச படத்தை காண்பித்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

whats-app-kiss-copy-2

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது சாம்வேல் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து சாம்வேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது காவலர்கள் கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களை தேடி வருகின்றனர்.