பெரும்பாலான நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் திடீர் முடக்கம்….

லகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகள் மற்றும் மெசேஞ்சர் போன்றவை நேற்று நள்ளிரவு முதல்  திடீரென முடங்கி உள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 200 கோடி போர் சமூக வலைதளங்கள் மூலமே தகவல் பரிமாற்றங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் நடைபெறும் இந்தியாவில், சமூக வலைதளங்கள் மூலமே  பெரும்பாலான கட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ் அப் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டு முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்  இணையதளத்தில், புதிய பதிவுகள் ஏதும் பதிய முடியாதவாறு முடக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இது சைபர் தாக்குதலா, ஹாக்கர்ஸ் உள்ளே புகுந்து விளையாடி உள்ளனரா என்பது குறித்து பேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும்,  பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.