பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் இணையதளத்துக்கு, பயனர்கள் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையம்.  இது இந்திய மதிப்பில் ரூ.35 கோடி ஆகும்.

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரின் தகவல்களை திருடு போன நிலையில், அதை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் இணையதளம் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டு, அந்த சமூக வலைதளம் மீது, 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிப்பது என, அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன்,  முடிவு செய்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஃபேஸ்புக் இணையதளத்தில் இருந்து, ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்ற தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் பயனர்களின் தகவல்களை திருடியதாக  குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தவறை பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். எனினும், இந்த ஊழல் விவகாரத்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பங்குகள் 18 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்த. மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6½ லட்சம் கோடி) வீழ்ச்சி அடைந்தது.

இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனம், உபயோகிப்பாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ‘பேஸ்புக்’ தகவல்கள் மேலாண்மை எளிதாகும்; அமைப்பு மெனு மறுவடிவமைப்பு செய்யப்படும்; உபயோகிப்பாளர்கள் தங்கள் தகவல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது .

குறிப்பாக, புதிய ‘பிரைவேசி ஷார்ட்கட்ஸ் மெனு’ ஒன்றை ‘பேஸ்புக்’ அறிமுகம் செய்யும். இதைக்கொண்டு, உபயோகிப்பாளர்கள் தங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தின் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்; அவர்களது தகவல்களை யார், யார் பார்க்கிறார்கள், செயல்களை யார், யார் காண்கிறார்கள் என்பதை கண்டு நிர்வகிக்க முடியும். அத்துடன் அவர்கள் பார்க்கிற விளம்பரங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று ‘பேஸ்புக்’ கூறியது.

எனினும், அமெரிக்க பெடரல் வர்த்தக கமிஷன்,  பேஸ் புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இதற்கிடையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் 22 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.