புதுடெல்லி:
ந்தியாவில் முகநூல் நிறுவனம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதை தொடர்ந்து முகநூலில் இந்திய பொதுக்கொள்கை இயக்குனரும் அதன் மூத்த செயலதிகாரியுமான அங்கி தாஸ் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முகநூல் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் ஏற்பட்ட மாற்றத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது… மேலும் ஒரு நபரை மாற்றுவதன் மூலம் இந்த விவகாரம் தீர்க்கப்படாது எனவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சி மற்றும் அதன் தலைவர்களை அங்கி தாஸ் ஆதரிப்பதாகவும் பாஜகவுக்கு ஆதரவாக போலியான வெறுக்கத்தக்க செய்திகளை பரப்புவதாகவும் செய்தித்தாள்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கிர்க்கு காங்கிரஸ் கட்சி இரண்டு முறை கடிதங்களை எழுதியுள்ளது, மேலும் இந்த விஷயத்தை பற்றி ஆராயுமாறு வலியுறுத்தியும் இருந்தது, இந்த கடிதத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பாரபட்சம் பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.