பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.
oo
 
யாழினி தேவி
நடராஜ் அவர்களின்  கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை அதற்காக தவறு என்றும் சொல்லி விட முடியாது. முகநூலில் தனது படங்களை பதிவதை, தன்னை பற்றிய வெளிப்படையான அடையாளமாக பெண்கள் நினைக்கலாம். அதே நேரம், தன்னுடைய அழகு ஆடம்பர வாழ்க்கை தன்னை பிறர் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படங்களை பதிபவர்களும் உண்டு. அதுதான் பிரச்சினையே.
பலர் தங்களுடைய  தொழில் துறைக்கான தகவல் உதவிக்காக முகநூலை பயன்படுத்துகிறார்கள்.   அவர்களுக்கு  தன்னை அடையாளப்படுத்த புகைப்படத்தை பதிவது அவசியம்.
என்னை போன்று mind relaxation பொழுது போக்கு க்கு / வீட்டிற்கு தெரியாமல் முகநூல் கணக்கு வைத்துள்ள பெண்கள் , படிக்கும் பெண்கள் நேரத்தை கடத்த வருபவர்களுக்கு  போட்டோ அடையாளம் தேவை இல்லாத தொல்லை தான் ஆனால் இத்தகைய உண்மையை பெண்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தவிர,ஆடையில் கண்ணியம் கொண்டு வந்தாலே பல பிரச்சினை தீரும். ஆணும் பெண்ணும் சமம் என்று பொங்குவதை விட அவர் அவர்களுக்கான கடமை சுய ஒழுக்கமே போதும்…  குற்றம் குறைவதற்கு!
(கருத்துக்கள் தொடர்கின்றன.)