பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது முட்டாள்த்தனம்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.

 

13599482_924495404361337_78755818_n

சுதா ஆறுமுகம்

 சக உயிராய் உணர்வோடு உடன் வாழும் பெண்ணுக்கு இல்லாத பாதுக்காப்பா புகைப்படத்திற்கு கிடைத்து விடப் போகிறது? அப்படி எதிர்பார்பது என்பது ஆகச் சிறந்த முட்டாள்தனம்.

”முக்காடு போட்டுக் கொண்டு முகம் மறைத்து இருங்கள்…
முகநூலில் பிரச்சனை இராது!

ரகசிய கேமரா தன்னை சுற்றி உள்ளதா என நோட்டமிட்டுக் கொண்டே இருங்கள்.  புகைப்படங்கள் பகிரப்படாது!

இழுத்துப் போர்த்திய சேலைக்குள்ளும் இருப்பதை மறைக்க முடியுமா எனப் பாருங்கள்…  பாதககர்களிடம் பிடிபடாமல் இருக்கலாம்!

வேலைக்கு வெளியிடங்களுக்கும் பொது இடங்களிலும் போகாதிருங்கள்…  பத்திரமாய் பாதுகாப்பாய் இருப்பீர்கள்!

மீறினால்……..

‪‎பெண்ணின் உடலும் உயிரும் மயிரும் அவனுக்குச் சொந்தம்!”  – இது என்ன நீதி?

(பெண்களின் கருத்துக்கள் தொடர்கின்றன.)

Leave a Reply

Your email address will not be published.