2012ம் ஆண்டு முதல் பேஸ்புக் பயனர்கள் 60 கோடி பேரின் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்

டந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை 60 கோடி பேரின் பேஸ்புக் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை  பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது, அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ் முதலில் சுட்டிக்காட்டியிருந்தார்.  அதன்படி, பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களால்,  பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டு எளிதில் அணுகும் வகையில் இருந்ததாகவும், இதன் காரணமாக சுமார் 20 கோடி பேர் முதல் 60 கோடி  பயனர்க ளின் பாஸ்வேர்டு  சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டு வெளியாகியிருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த முறைகேடு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனத்துக்கு 80,000 பேஸ்புக் பயனர்களின் பார்வர்டு கிடைத்திருந்த நிலையில் கிரெப்ஸ்-ன் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதில் அளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்,  தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வொர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாஸ்வேர்டு திருடு போனதை பேஸ்புக் நிறுவனம் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.