முகநூல் : 200 செயலிகளுக்கு தற்காலிக தடை

டில்லி

முகநூலை சார்ந்து செயல்படும் 200 செயலிகளை அந்நிறுவனம் தற்காலிகமாக தடை செய்து உள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் முகநூல் பயனாளிகளின் தகவலை கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.   அதற்காக மன்னிப்பு கோரிய முகநூல் அதிபர் மார்க் இனி பயனாளிகள் தகவலை பாதுகாப்பதாக உறுதி அளித்தார்..

அதை ஒட்டி தற்போது சுமார் 200 செயலிகளுக்கு தற்காலிக தடை விதித்த முகநூல் நிறுவனம் அந்த செயலிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.    மிகவும் புகழ்பெற்று விளங்கும் மை பர்சனாலிடி உட்பட பல செயலிகள் இவ்வாறு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் இந்த செயலிகளின் மூலம் தகவல் திருடப்பட உள்ளது உண்மை என தெரிந்தால் அந்த செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என முகநூல் நிர்வாகத்தின் டில்லிக் கிளை தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி