பேஸ்புக் தான் தேர்தல் ஆணையத்தின் சமூக வலை தள பார்ட்னர்….ஒ.பி.ராவத்

டில்லி:

இந்திய தேர்தல் ஆணையத்தில் சமூக வலை தள பார்ட்னராக பேஸ்புக் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் கூறுகையில், ‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பேஸ்புக் தேர்தல் ஆணையத்தின் சமூக வலை தள பார்ட்டனராக இருக்கும். ஆணையத்துக்கும் பேஸ்புக்கில் கணக்கு உள்ளது. சமூக வலை தளம் உண்மையின் பிரதிபலிப்பாக உள்ளது. இதன் மூலம் இந்திய தேர்தலை பாதிக்கும் எத்தகைய செயல்பாட்டையும் தடுக்க தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆணையத்தின் சமூக வலை தள பிரிவு அரசியல்வாதிகளின் செயலிகள், பயனீட்டாளர்களின் தகவல்களை உரிய அனுமதி இன்றி அரசியல் கட்சிகள் பகிர்தல் போன்ற பிரச்னைகளை கண்காணிக்கும். இந்த பிரிவு அளிக்கும் பரிந்துரைகள் மீது தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தும். எந்தவிதமான முறைகேடுகளாலும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை தவிர்க்க முடியாது. வங்கிகளில் தற்போது மோசடி நடக்கிறது. அதனால் வங்கிகளை மூட முடியாது’’ என்றார்.