15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை களவாடிய பேஸ்புக்

15 லட்சம் தனிநபர்களின் மின்னஞ்சல் முகவரியில் உள்ள முகவரிப்பட்டியலில் (Address Book) இருந்த மின்னஞ்சல் முகவரிகளை  அவர்களது அனுமதியின்று எடுத்தததாகவும், ஆனால் அதை எந்த உள் நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை என்றும், அவற்றை தற்போது நீக்கி விட்டதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது

சமீபத்தில் பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்த பலரது கணக்குகளில்  அவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின்  பயனர் மின்னஞ்சல் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொடுக்க வலியுறுத்திய பின்னர் அந்த மின்னஞ்சலில் உள்ள முகவரிப்பட்டியலில் உள்ள மற்றவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை பேஸ்புக் நிறுவனம் பெற்றுள்ளதை  மென்பொருள் பாதுகாப்பு  வல்லுநர்கள் மேற்கொண்டு ஆராய்ந்ததில் இந்தப்பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது

இப்படி பலரது அனுமதியின்றி அவர்களின் அட்ரஸ்புக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளை பெற்றதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க சட்ட விதிமுறைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட விதிமுறைகள் உட்பட பல சட்டவிதிமுறைகளை மீறியுள்ளது தெளிவாகிறது

அமெரிக்காவின் US FTC , ஐரோப்பிய நாடுகளின் குழும விதிமுறையான  EU General Data Protection Regulation (GDPR) – the European Union’s data privacy regulation மற்றும் Computer Fraud and Abuse Act (CFAA), a US criminal statute involving computer fraud and abuse போன்ற முக்கிய சட்டங்களையும் மீறியுள்ளது

2011 முதலே இந்நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் பயனாளர்களின் கடவுச்சொல்லை மறைகுறியுடன் சேமிக்காமல் கடவுச்சொல்லை அப்படியே பார்க்கும்படி வைத்திருந்ததும், அதன்பின்னர் பல்வேறு மூன்றும் நபர் செயலிகளின் வழியே மின்னஞ்சல் முகவரியை பொதுவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இப்போது இந்த பிரச்னையும் ஏற்பட்டுள்ளது

-செல்வமுரளி