சமூக விரோத கட்டுரைகளை கண்காணிக்க 7,500 பேருக்கு பயிற்சி….பேஸ்புக் நடவடிக்கை

--

வாஷிங்டன்:

தற்போதைய நவீன காலத்தில் சமூக வலை தளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். அதனால் சமூக விரோத கும்பல் இதில் ஊடுறுவி பாலியல் வன்முறை, தீவிரவாதம், வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இதை கட்டுப்படுத்த உலகளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தீவிரவாதம் தொடர்பான பதிவுகள், பிரிவினையை தூண்டும் வகையிலான வெறுப்பு பேச்சுக்கள் அடங்கிய பதிவுகள், கட்டுரைகள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை ஆய்வு செய்ய பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக கட்டுரைகளை ஆய்வு செய்வது குறித்து 7,500 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறது. இவர்கள் முழு நேர ஊழியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், சமூக வலைநிறுவனங்களின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘‘கட்டுரை ஆய்வுகள் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது கிடையாது. பலதரப்பட்ட மொழி, கலாச்சாரம், பல நாடுகளை சேர்ந்தவர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இந்த சவாலை உரிய முறையில் எதிர்கொள்ளப்படும்.

உள்ளூர் மொழியாக்க நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டுரைகளை ஆய்வு செய்ய 7,500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர் எலன் சில்வர் தெரிவித்துள்ளார்.