cinema
தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவுக்கே தலைவலியாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது திருட்டு வீ.சி.டி மட்டும் தான் என்று சொல்லலாம். இதை தடுக்க தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து சங்கமும் போராடி வருகின்ற நிலையில் இது வரை இதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை, அதற்குள் இப்போது புது பிரச்சனை வந்துள்ளது.
பொதுவாகவே இந்த நெட்டிசன்களின் அட்டிராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது இந்த நிலையில் சமூக வலைதளங்கள் இப்போது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு லைவ் செய்யும் வசதி கொடுத்துள்ளது. உலகின் எந்த மூளையில் இருந்தும் லைவ் செய்து கொள்ளலாம்.
இதனால் தமிழ் சினிமாவுக்கு என்ன தலைவளி என்றால் ஒரு படத்தை திரையரங்கிலிருந்தே முழு படத்தையும் லைவ் மூலம் வெளியிட்டுவிடுகின்றனர். உதாரணமாக சமீபத்தில் வெளியான “காஷ்மோரா” “கொடி” ஆகிய படங்களை சர்வ சாதாரணமாக இணையத்தில் வெளியாகும் முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
இதனால் இதை போன்ற சம்பவங்கள் நடக்ககூடாது என்றால் திரையரங்குகளில் ஜாம்மர் வசதி இருக்க வேண்டும் அப்போது தான் திருட்டு வீசிடியை தடுக்க முடியாவிட்டாலும், சமூக வளைதளங்களில் வெளியாகாமல் தடுத்து தயாரிப்பாளர்களை காப்பாற்றலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஒரு தலைவலிக்கே இங்கு நிறைய அரசியல் நடக்குது இப்போ இது வேறயா???