டில்லி

வாட்ஸ்அப்பில்  அனுப்பிய மெசேஜை அழிக்கும் வசதி புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது முகநூல், ட்விட்டர் ஆகிய தளங்களில் நாம் அனுப்பிய செய்திகளை அழிக்கும் வசதி உள்ளது.   ஆனால் வாட்ஸ்அப் பொறுத்த வரை ஒரு முறை அனுப்பிய செய்தியை அழிக்க இயலாது.   அப்படியே அழித்தாலும் அது நமது மொபைலில் மட்டுமே அழிக்கப்படும்.   தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அழித்தாலும் அது அனுப்பப்பட்ட்வர்களை போய் சேர்ந்து விடும்.

தற்போது நமது மொபைலில் மட்டும் இன்றி மற்றவர் மொபைலிலும் இந்த செய்தியை அழிக்கும் வசதியை இந்தியாவில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தப் படுத்தி உள்ளது.   இந்த வசதிக்கு ஆங்கிலத்தில் ரிகால் அ மெசேஜ் (செய்தியை திரும்பப் பெறுதல்) என பெயரிடப்பட்டுள்ளது.    அதன் படி நீங்கள் செய்தியை அழிக்கும் போது உங்களுக்கு  மூன்று கேள்விகள் வரும்.  அதன்படி செய்தியை உங்கள் மொபைலில் மட்டும் அழிக்க வேண்டுமா?  அழிக்கவே வேண்டாமா?  அனைவருடைய மொபைலிலும் அழிக்க வேண்டுமா?  என்பதே அந்த மூன்று கேள்விகள்.

அதன்படி நீங்கள் தேர்ந்தெடுப்பது அழிக்கப்படும்.   அனைவருடைய மொபைலிலும் அழிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் அனுப்பிய மொபைலிலும் அழிக்கப்பட்டு விடும்.  இதை செய்ய ஏழு நிமிடங்கள் காலக்கெடு உண்டு.  அதற்குள் அழிக்க வேண்டும்.     அதை அழித்த பின் நீங்கள் அனுப்பிய செய்தி இருந்த இடத்தில் ஆங்கிலத்தில் யு டிலீடட் தி மெசேஜ் (நீங்கள் இந்த செய்தியை அழித்து விட்டீர்கள்) என்பது மட்டுமே தெரியும்.   செய்திகள் தெரியாது.