மும்பை

தொழிற்சாலையை மூடும் சட்டத்தை மேலும் எளிமையாக்க அரசு உத்தேசித்திருப்பதால் பல தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்திய தொழில் சட்டத்தின்படி தொழிற்சாலையை மூட வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகள் உள்ளன.  அதாவது தற்போதைய மகாராஷ்டிரா மாநில சட்டப்படி,  100க்கு குறைவான தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் அரசாங்க அனுமதி இன்றி மூடப்படலாம்.   மற்றும் அங்கு பணி புரிவோரையும் பணி நீக்கம் செய்யலாம்.

இந்த குறைந்த பட்சம் 100 பேர் என்பதை குறைந்தது 300 பேர் உள்ள தொழிற்சாலைகளையும் மூடலாம், மற்றும் அவர்களையும் அரசுக்கு தெரிவிக்காமல் பணி நீக்கம் செய்யலாம் என மாற்றுமாறு பல தொழில் முனைவோர்கள் வேண்ட்கோள் விடுத்துள்ளனர்.   இதே நடைமுறை ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளனர்.

இதை 300க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் தொழிற்சாலைகளுக்கும் கொண்டு வரலாம் என சிலர் கருத்துதெரிவித்துள்ளனர்.    அதாவது அந்த பணியாளர்களுக்கு 60 நாட்கள் நோட்டிஸ் அல்லது 60 நாட்களுக்கான ஊதியம் தரவேண்டும் எனவும் அத்துடன் அவர்கள் பணி புரிந்த ஒவ்வொரு வருடத்துக்கும் 60 நாட்கள் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.   அப்படி இருப்பின் அவர்களும் அரசு அனுமதி பெறாமல் தொழிற்சாலைகளை மூடலாம் என சட்டத்தை மாற்றுமாறு கூறுகின்றனர்.

இந்த சட்டம் இயற்றப்பட்டால் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 45%க்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை எளிதாக மூட முடியும்.  அதாவது 1365 தொழிற்சாலைகள் மூடப்ப்பட்டு 11.37 லட்சம் பேர் பணி இழப்பார்கள்.   ஆனால் இதற்கு மாநில தொழிலாளர் நல இயக்ககத்தின் காரியதரிசி மறுப்பு தெரிவித்துள்ளார்.   இந்த சட்டத்தின் மூலம் தற்போது வருடத்துக்கு 15 நாட்கள் என்னும் கணக்கில் வேலை செய்த வருடங்களுக்கு தரப்படும் இழப்பீடு நான்கு மடங்காவதால் இது தொழிலாளர்களுக்கு நன்மை என அவர் கூறுகிறார்.

இது குறித்து அரசு விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என தெரிய வருகிறது.