மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :

மூளைச் சாவு என்பதன் முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உடல் உறுப்பு தானம் தற்போது பரவலாகி வருகிறது.  சமீபத்தில் இந்தியாவில் எட்டு வயது சிறுமி ஒருவர் மூளைச்சாவு அடைந்தததால் அவருடைய உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு பல குழந்தைகல் வாழ்வு பெற்றுள்ளனர்.   இந்த உறுப்பு தானத்தை  மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும்.  மூளைச்சாவு என்பதை பற்றிய முழு விவரம் இதோ

மூளையின் கீழ்ப்பகுதி முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும்,   இதன் மூலம் அனைத்து மனிதர்களின் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு அகியவைகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது.   இது பழுதடைந்தால் அப்போது அந்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

சாலை விபத்து, அல்லது மாரடைப்பு காரணமாக மூளையில் அடிபட்டு மூளை சாவு ஏற்படுகிறது.    காயத்தினால் மூளை வீங்கத் தொடங்குகிறது.   ஆனால் மண்டை ஓடு எலும்பு மிகவும் கடினமாக இருப்பதால் அந்த வீக்கத்தை தடுத்து மூளைக்கு அழுத்தம் அளிக்கிறது.   இருதயத்தில் உள்ள இரத்த அழுத்தத்தை விட மூளை அழுத்தம் அதிகம் ஆகும் போது இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போகிறது.

மூளையில் உள்ள இரத்தத்துக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் அது ஒரே இடத்தில் நிற்பதால் முதுகெலும்புக்கு செல்லும் மூளையின் கீழ்ப்பகுதி பாதிக்கப்படுகிறது.   அதை ஒட்டி அந்த மனிதர் இறந்ததாக கூறப்படுகிறார்.   மூளைச்சாவு என்பதும் சட்டப்படி இறப்புக்கு சமமாகவே கருதப்படுகிறது.   இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டபூர்வமாகிறது.

உடல் உறுப்புக்கள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது.   இதனால் அந்த உறுப்புக்கள் எடுக்கப்படும் வரையில் ஆக்சிஜன் ஊட்டப்பட்ட இரத்த ஓட்டம் அந்த  உறுப்புக்களுக்கு கிடைக்கிறது.    இதனால் இதயம் துடித்தாலும் அந்த மனிதர் இறந்து போனவராகவே கருதப்படுகிறார்.

ஒரு மனிதருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு மட்டுமே தெரிவிக்க முடியும்.  அவர்கள் அதற்கு முன்பு நோயாளியால் இயந்திர உதவி இன்றி சுவாசிக்க முடிகிறதா,  கண் விழிகள் வெளிச்சத்தை உணர்கிறதா,  உடலில் வலி போன்ற உணர்வுகள் உள்ளதா போன்றவற்றை இருமுறை பரிசோதிக்க வேண்டும்.  ஒரு பரிசோதனைக்கும் மற்றொன்றுக்கும் இடையில் 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.   மூளச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவராக இருத்தல் வேண்டும்.

கார்ட்டூன் கேலரி