மணிரத்னம் வெப் சீரிஸில் ஃபகத் பாசில்….?

--

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அமேசான் நிறுவனத்துக்காக ‘நவரசா’ என்ற பெயரில் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸ் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த 9 கதைகளையும் ஒன்றிணைத்து வெப் சீரிஸாகத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

இந்த வெப் சீரிசுக்காக நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். இதில் சூர்யா, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இதில் ஃபகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மணிரத்னம், ஜெயந்திரா, கே.வி.ஆனந்த், சுதா, சித்தார்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர்தான் இந்த 9 கதைகளை இயக்கவுள்ளனர். இதன் மூலம் அரவிந்த்சாமி மற்றும் சித்தார்த் இருவருமே இயக்குநர்களாக அறிமுகமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .