தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
சூப்பர் டீலக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ஃபகத் பாசில் “நான் அவரது அடுத்த படத்தில் இருக்கிறேன். அதைத் தனியாகச் சொல்லவே வேண்டாம். அது தானாக இருக்கும் ஒரு விஷயம். கண்டிப்பாக நான் அதில் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.