2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் – ’பிரேமம்’.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் நிவீன்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்போது, அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இயக்குநர் பாசில் மகன் ஃபகத் பாசிலை கதாநாயகனாக வைத்து ‘பாட்டு’ என்ற புதிய மலையாள படத்தை இயக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த படத்தில் ஃபகத் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக நேற்று அல்போன்ஸ் புத்திரன் அறிவித்தார்.

கதை வசனம் எழுதி டைரக்டு செய்துவதுடன் இந்த படத்துக்கு அல்போன்ஸ் இசை அமைக்கவும் முடிவு செய்துள்ளார்.

ஜக்கரியா தாமஸ், ஆல்வின் அந்தோணி ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

அடுத்த மாத மத்தியில் கேரளாவில், ‘பாட்டு’ ஷுட்டிங் ஆரம்பமாகிறது.

– பா. பாரதி