‘புஷ்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஃபகத் பாசில்….!

தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் மலையாள நடிகர் பகத் பாசில்.

தமிழில் வேலைக்காரன் படத்தில் அறிமுகமான பகத், அடுத்து சூப்பர் டீலக்ஸில் நடித்தார். மூன்றாவது படமாக கமலின் விக்ரமில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் புஷ்பா படத்தின் டீஸர் வெளியாகி 3.8 கோடி பார்வைகள், 1 கோடி லைக்குகள் என்று பட்டையை கிளப்பியதே, அந்த புஷ்பாவில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது அவரின் முதல் தெலுங்குப் படமாகும்.