விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபஹத் ஃபாசில் !

திரையுலகில் வித்தியாசமான ரோலில் நடித்து வருபவர் ஃபஹத் ஃபாசில். நஸ்ரியாவின் கணவரான இவர், தற்போது சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் மலையன் குஞ்சு என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் ஸ்டண்ட் காட்சியை படமாக்கியபோது ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஃபஹத் ஃபாசில் காயம் அடைந்தார்.

இதில் ஃபஹத்தின் முகத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை கொச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த விபத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.