நெட்டிசன்:
பிரபல எழுத்தாளர்  முகநூல் பதிவில் இருந்து..
கார், வீடு, அரசு வேலை, நிரந்தர வருமானம், கோடிக்கணக்குல பணம்.. ஒலிம்பிக்ல ஜெயிக்கற வீரர்களுக்கு  இப்படி பரிசுகள் குவியுது.
ஆனா கென்ய வீராங்கனை பெய்த் கிப்யிகான், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றதுக்கு கிடைச்ச பரிசு, மற்ற எல்லா பரிசுகளையும் விட பெருசு.
ஆமாம்… கிப்யிகான் ஒலிம்பிக்-கில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, கிப்யிகானின் அப்பா, கென்ய நாட்டு அதிபருக்கு ஒரு கோரிக்கை வச்சார். தங்களோட நடாபி பிட் கிராமத்திற்கு மின்வசதி செய்துதரணும்கிறதுதான் அந்த கோரிக்கை. ஆமாம்.. அந்த கிராமத்துக்கு மின் வசதி கிடையாது.
14117840_1250888028289133_5638202292354997284_n
கென்ய அதிபர் இதை உடனே ஏத்துக்கிட்டார். இப்போ அந்த கிராமம் மின் ஒளியில ஜொலிக்குது. அந்த கிராமத்து மக்கள் இப்போ சந்தோசத்துல மிதக்கறாங்க..,!
உலகத்திலேயே பெரிய  சந்தோசம், மத்தவங்களை சந்தோசப்படுத்தி பாக்கறதுதானே!