பைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி என பெயர் மாற்றம் : உ. பி. முதல்வர்

யோத்தி

த்திரப் பிரதேசத்தில் அயோத்தி நகர் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்துகு அயோத்தி என பெயர் மாற்ற உள்ளதாக முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் நாளை 3 லட்சம் பேர் பங்கு பெறும் அகல் விளக்கேற்றும் தீப உற்சவம் நடைபெற்றது. தென் கொரிய அதிபர் மனைவி கிம் ஜூங் சுக் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள இந்தியா வந்துள்ளார். அவருக்கு அயோத்தியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று நடந்த இந்த விழாவில் 3,01,152 அகல் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டு இது கின்னஸ் சாதனை ஆனது. இந்த சாதனைக்கான சான்றிதழ் உத்திரப் பிரதேச முதல்வர் யோகியிடம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு உத்திரப் பிரதேச அரசு சார்பில் ராமாயண வரலாற்றை விளக்கும் பண்பாட்டு நிகழ்ச்சி அயோத்தியில் நடைபெற்றது

இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்களுடன் தென் கொரிய அதிபர் மனைவியும் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேசும் போது முதல்வர் யோகி ஆதித்யநாத், ”இந்த விழாவுக்கு வந்துள்ள தென் கொரிய அதிபர் மனைவிக்கு நல்வரவு அளிக்கிறேன். இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கு 2 ஆயிரம் ஆண்டு பழமையான கலாசார தொடர்பு உள்ளது. ராமரை கொண்டாட இருவரும் மீண்டும் இங்கு இணைந்துள்ளோம். அயோத்தி நகர் இந்தியாவின் பெருமை மற்றும் பாரம்பரிய குறியீடாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு அயோத்தி என்னும் பெயரை சொல்லவே மக்கள் பயந்ததோடு எந்த முதல்வரும் இங்கு வந்தது இல்லை. ராமர் என்றாலே அயோத்தி என்பது உண்மை. அதனால்  பைசாபாத் மவட்டத்தின் பெயரை அயோத்தி மாவட்டம் என மாற்ற உள்ளோம்” என அறிவித்தார்.

You may have missed