மதுரை:
முன்ஜாமின் மனு போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதால், சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
சசிகலாபுஷ்பா மீது  பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான வழக்கில்மு ன்ஜாமின் கோரி பெண் எம்.பி குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு  தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி மீது,  துாத்துக்குடியை சேர்ந்த பானுமதி என்பவர், ‘அவரது கணவர், மகன் பாலியல் ரீதியாக தன்னை  துன்புறுத்தினர் என்றும், இதுகுறித்து  சசிகலா புஷ்பாவிடம் கூறியபோது, இதை கண்டுகொள்ளாதே என்றார்’ என, துாத்துக்குடி அருகே உள்ள  புதுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரை அடுத்து, போலலீசார் வன்கொடுமை  தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
mdu
இதனால், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர், முன் ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.  ஜாமினுக்கு  எதிர்ப்பு தெரிவித்து  பானுமதியும் மனு செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி வி.எம். வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் அரசு வழக்கறிஞர் புகழேந்தி வாதத்தின்போது,  சசிகலா புஷ்பா, ஆக., 17ல்; அவரது கணவர் ஆக., 16ல் சிங்கப்பூர் சென்றனர். இருவரும் ஆக., 18ல், இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக சொல்லப் படும் முன்ஜாமின் மனுவில், ஆக., 17ல், மதுரை யில் அவர்களின் வழக்கறிஞர் முன்னிலையில் ஆஜராகி, கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இருவரும், தற்போது வரை வெளிநாட்டில் தான் உள்ளனர்.
முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யும் போது, சில நடைமுறைகளை பின்பற்ற, 2012ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; அதன்படி, முன் ஜாமின் மனுவில்,சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட வேண்டும்.  தன் சார்பில் வழக்கறிஞர் ஆஜராக சம்மதித்து, வக்காலத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில், ‘இம்மனுவை நான்தான் தாக்கல் செய்ய அறிவுறுத்தினேன்’ என, ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்; எந்த நடைமுறையையும் சசிகலா புஷ்பா பின்பற்றவில்லை. எனவே, மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
நீதிபதி: மனு தாக்கலில் மோசடி நடந்துள்ளதாக, அரசுத் தரப்பு சந்தேகம் எழுப்புகிறது. இதற்கு மனுதாரர் தரப்பு விளக்கம் என்ன?
மனுதாரர் வழக்கறிஞர்: மனுதாரர்களின் அறிவுறுத்தலில், வழக்கு தாக்கல் செய்தேன்.
நீதிபதி: மனு தாக்கல் செய்ததில் சந்தேகம் நிலவுவதால், மனுதாரர்கள் மூவரும், ஆக 29ல் ஆஜராகி, விளக்கமளிக்க வேண்டும். ஆஜராகாவிடில், தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு வாதம் நடந்தது. இவ்வழக்கில், சசிகலா புஷ்பாவின் தாய் கவுரி, தாக்கல் செய்த முன்ஜாமின் மனு வையும் ஆக., 29க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.