போலி ஏடிஎம் கார்டு தயாரித்த கம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகிகள் பாலாஜி, ஜெயச்சந்திரன்

புதுச்சேரி:

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து லட்சகணக்கில் பண மோசடி செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரியில் பலருக்கு, தாங்கள் ஏடிம் மூலம் பணம் எடுக்காமலேயே, ஏடிம் உபயோகித்து பணம் எடுக்கப்பட்ட தாக  மொபைலில் தகவல் வந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இதுகுறித்து வங்கியிலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதுகுறித்து  புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  இது தொடர்பாக  புதுச்சேரி சித்தன்குடியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் அதிரடியோக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு போலி ஏடிஎம் கார்டுகள் தயாரிப்பது தெரிய வந்தது.

அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நடைபெற்ற சோதனையின்போது, அங்கு ஏராளமான மின்னணு சாதனங்கள்,  வெள்ளை நிற ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அந்த நிறுவனத்தை நடத்தி வந்த, லாஸ்பேட்டையை சேர்ந்த பாலாஜி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், அவர்கள் போலி ஏடிஎம் கார்டு தயாரித்து வந்தது தெரிய வந்தது. குற்றவாளிகள்  இருவரும் ஸ்கிம்மர் மெஷின், மற்றும் ரகசிய கேமிரா மூலம் ஏடிஎம்களில் மையங்களில் எடுக்கப்படும்  பண பரிவர்தனையை தெரிந்துகொண்டு, அதுபோலவே ஏடிஎம் கார்டு தயாரித்து, அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பணத்தை பிஓஎஸ் (POS) மெஷின் மூலம் ஸ்வைப் செய்து குற்றவாளிகளின் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்களின் பாலாஜி என்பவர் பொறியியல் பட்டதாரி. இவர் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பிஜேம் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.  இது போலவே கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவரான ஜெயச்சந்திரன் என்பவர் புதுச்சேரி வள்ளலார் சாலையில் எஸ்.எஸ் கம்ப்யூட்டார் சென்டர் நடத்தி வருகிறார்.

இவர்கள் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்களின் பணத்தை திருடி, இவர்களது தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான பணம், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் POS மெஷின்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த  உள்ள தமிழகம் மற்றும் கேரளாவைச் சார்ந்த மேலும்  இருவரை போலீசார்  தேடி வருகின்றனர்.