கேரளா பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.35 லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

திருச்சூர்:

கேரளா மாநிலம் பாஜ நிர்வாக வீட்டில் இருந்து ரூ.1.35 லட்சம் மதிப்பு கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா மாநிலம் கொடுங்கலூர் மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்த பாஜ தலைவர் ராகேஷ். இவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரது வீடுகளில் இருந்து ரூ. 1.35 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500, ரூ.50, ரூ.20 ஆகிய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அச்சடிப்பு எந்திரமும் கைப்பற்றப்பட்டது.

இவர்கள் இருவரும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறியிருப்பதாக உளவுத் துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் இவர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

ஏற்கனவே ஆபரேஷன் குபேரா என்ற பெயரில் போலீசார் சட்ட விரோத பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆபரேஷனின் ஒரு கட்டமாக தான் தற்போது பாஜ தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.