போலி டாக்டர்கள் களையெடுப்பு: மருந்து விற்பனையை நெறிப்படுத்த தமிழக அரசு தீவிரம்

சென்னை:

மிழ்நாட்டில் உள்ள போலி டாக்டர்களை கண்டுபிடித்து களையெடுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து,, மருந்து விற்பனையை நெறிப்படுத்ததும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
உரிய மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகளை விற்பது கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதை யொட்டி தேவையற்ற விபரீதங்களைத் தவிர்க்க அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  அரசு அதிகாரிகள் நடத்திய வேட்டையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் எட்டு போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர், அதே பகுதியைச் சேர்ந்த மேலும் எட்டு போலி டாக்டர்கள் தலைமறைவானதாகவும் தெரியவருகிறது.

fake doctor

காய்ச்சல் உள்ளிட்ட எந்த வியாதிக்கும் உரிய மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்தை விற்கக்கூடாது என்ற கடுமையான ஆணை மருந்தகங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 2,000 பணியாளர்கள் சேவையில் இருப்பதாகவும், பல விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரிலிருந்து மட்டும் 27 குழந்தைகள் உட்பட 128 காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  தீவிர மருத்துவப்பரிசோதனைக்குப் பின்னர் அவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட எந்த அபாயமும் இல்லை என்று கண்டறியப்பட்டதாக அப்பகுதியிலிருந்து வரும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.