மதுரை :

டிகர் தனுஷ் தங்களது மகன் என வழக்கு தொடர்ந்த மதுரை தம்பதியினர், மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கின்போது தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கல்விச்சான்றிதழ் போலியானது என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த மேலூர் நீதிமன்றம்,  நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு விளக்கம் அளிக் ககோரி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் தனது பெற்றோருடன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக எவலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினியின் மருமகனும் ஆவார். இவரை தங்களது மகன் என்று கூறி  மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர்  மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, தனுஷின் கல்வி சான்றிதழ், அங்க அடையாளர்கள் போன்றவைகளை சரிபார்த்த நீதிமன்றம்,  கதிரேசன் தரப்பு வழக்கில் உண்மை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் கதிரேசன் தம்பதியினர் மீண்டும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  கல்வி சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களும் பொய்யானவை என தெரிவித்து உள்ளார்.

இதை விசாரித்த நீதிமன்றம்,   நடிகர் தனுஷ் மற்றும் புதூர் காவல் ஆய்வாளருக்கு விளக்கம் அளிக்க கோரி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, நடிகர் தனுஷ் நேரில் வரவழைக் கப்பட்டு,  மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி அறையில் வைத்து தனுஷின் அங்க அடையாளங்கள்  பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மருத்துவமனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தனுஷ் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் ரேசர் கருவி மூலம் அழிக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.