திருவனந்தபுரம்:

குஜராத் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை கார் விபத்தில் சிக்கி பலியானார்.

2004ம் ஆண்டில் குஜராத்தில் போலி என்கவுண்ட்டர் மூலம் இஷ்ராத் ஜகான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவித் ஷேக் மற்றும் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஜாவித் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை கேரளா மாநிலம் ஆழப்புழா நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரை அவரது தம்பி ஓட்டினார். மனைவியும் காரில் பயணம் செய்தார். அனைவரும் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார் இவரது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் இவரது கார் தாறுமாறாக ஓடி மற்றொரு காருடன் மோதியது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் பிள்ளை மருத்துவமனையில சேர்க்கப்பட்டு இறந்தார்.

போலி என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜாவித் ஷேக் ஒரு தீவிரவாதி என்ற போலீசாரின் குற்றச்சாட்டை எதிர்த்து கோபிநாத் பிள்ளை வழக்கு தொடர்ந்து நடத்தி வந்தார். போலி என்கவுண்ட்டர் வழக்கில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 போலீசார் மீது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.