ஜெ. தீபா வீட்டில் “சோதனை”யிட வந்த போலி வருமானவரி அதிகாரி!

--

சென்னை:

ஜெ. தீபா வீட்டுக்கு “சோதனை”யிட வருமானவரி அதிகாரி சொல்லிக்கொண்டு போலி நபர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வருபவர் ஜெ.தீபா. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள். இவர், தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்பவர் வந்திருப்பதாகவும், மற்ற அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடக்கும் என்றும் தகவல் வெளியானது.

இதற்கிடையே காவல்துறையினர் தீபாவின் வீட்டுக்குச் சென்றனர். அவரைப் பார்த்த மித்தேஷ்குமார் என்பவர் தப்பி ஓடினார். அவர் போலியான நபர் என்பது தெரியவந்தது.

தற்போது அவரைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

You may have missed