ராகுல் காந்தி குறித்த பொய்ச் செய்தி அம்பலம் : உண்மை வீடியோ இதோ

டில்லி

காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியிடம் துபாயில் ஒரு 14 வயதுப்பெண் கேள்வி கேட்டதாக பரப்பப்படும் பொய் செய்தியின் உண்மை வீடியோ கடந்த 2016 ஆம் வருடம் வெளியாகி உள்ளது.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் துபாயில் ஒரு நேர்காணல் நடத்தியதாகவும் அந்த நேர்காணலில் ஒரு 14 வயதுப் பெண் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்டு திணற அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.   அந்த தகவலின் உண்மை தன்மை குறித்து அறியாமல் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,  தினமலர் ஊடகம் உள்ளிட்ட பலரும் இதை பகிர்ந்தனர்.    அந்த தகவல் போலி என தற்போது சில வடநாட்டு ஊடகங்கள் ஆய்ந்து தகவல்கள் வெளியிட்டுள்ளன.

அந்த பெண் கேள்வி கேட்டதாக புகைப்படங்கள் வெளியான போதிலும் வீடியோ ஏதும் வெளியாகததால்  சந்தேகம் அடைந்த ஊடகங்கள் புலனாய்ந்து அந்தப் பெண்ணின் பெயர் சித்தி என்பதும் அவர் கடந்த 2016 ஆம் வருடம் பெண் குழந்தைகளை காப்போம் என்னும் தலைப்பில் உரையாற்றிய வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன.

இவ்வாறு பொய்த் தகவலை பரப்பியவர்களுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் அந்தப் பெண் கடந்த 2016 ல் பேசிய விடியோவின் யுடியூப் பதிவையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நமது வாசகர்களுக்காக அந்த யூ டியூப் விடியோ பதிவு இதோ