பாகிஸ்தானின் சிண்டு முடியும் செய்திக்கு சீனா கண்டனம்

பீஜீங்:

சீனாவின் ராக்கெட் தாக்குதலில் 150 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ‘‘டான்’’ உள்ளிட்ட மீடியாக்கள் இந்தியாவுக்கு எதிராக விஷமச் செய்திகளை பரப்பி வருகின்றன. துனியா நியூஸ் டி.வி, பாகிஸ்தான் டிரிப் டிவி.யிலும் போலிக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பானது.

தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் உடல்களைக் தூக்கிச் செல்வது போலவும் காயமடைந்த வீரர்களை சிகிச்சைக்கு தூக்கிச் செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாயின. இதில் இந்திய வீரர்கள் 150 இறந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டது.

வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன என்றார்.

பாகிஸ்தான் ஊடகங்களின் ஆதர மற்ற இத்தகைய செய்திகளுக்கு சீனா ஊடகங்கள் கண்டன தெரிவித்துள்ளன. இது குறித்து சீனாவின் அதிகார பூர்வ ஊடகம் வெளீயிட்டு உள்ள தகவலில் பாகிஸ்தான் ஊடகங்களின் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய பத்திரிகையான குளோபல் டைம்ஸ் அறிக்கையில், ‘‘பாக்கிஸ்தானிய ஊடக அறிக்கை நியாயமற்றது மற்றும் போலியானது’’என்று குறிப்பிட்டுள்ளது.