போலி பாஸ்போர்ட்டு தயாரித்த 10 பேர் கும்பல் கைது: 100 போலி பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல்

சென்னை:

சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்து வந்ததாக 10 பேர் கொண்ட கும்பல்  காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் போலி பாஸ்போர்டுகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையிலும் போலி பாஸ்போர்ட்டுகள் நடமாடுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து காவல்துறையினர் ரகசியமான முறையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து கொடுத்து பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, குணாளன், சக்திவேல் உள்பட 10 பேர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர்  நடத்திய அதிரடி விசாணையில், இவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் ரகசியமாக அலுவலகம் வைத்து இயங்கி வந்ததும், இவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும், இதுவரை யார் யாருக்கெல்லாம் போலி பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

You may have missed