டி.வி.எஸ். சோமு பக்கம்:
tvs-somu
ஜெயலலிதா நிறுவிய அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.” இதழில்  வெளியாகியிருக்கும் கட்டுரை ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாபுஷ்பா குறித்து  “சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்!” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அக் கட்டுரையில், “எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை.
போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்… என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு…” என்றெல்லாம் கீழ்த்தரமான வரிகள் காணப்படுகின்றன. மேலும், “உனது பழைய பூக்கடை சமாச்சாரங்களை நீயாகவே முன்வந்து தோண்டி எடுக்கச் சொல்கிறாய்” என்பது போன்ற
untitled-4
ரீதியில் சசிகலா புஷ்பாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக எழுதப்பட்டிருக்கிறது.
“அப்படியானால் சசிகலாபுஷ்பா குறித்து ஏற்கெனவே தெரிந்துதான் மேயர் பதவி, எம்.பி. பதவி எல்லாம் கட்சித் தலைமை அளித்ததா” என்று கேள்வி எழுகிறது.
தவிர ஜெயலலிதாவை யாரேனும் விமர்சித்தால், “ஒரு பெண் என்றும் பாராமல்” என்று அ.தி.மு.க.வில் இருந்து அறிக்கைகள் வரும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட சிலர் கோரியதும், உடனே “ஒரு பெண்மணி சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட கேட்கலாமா” என்று சொல்லப்பட்டது.
இருக்கட்டும்.
தற்போது ஜெயலலிதா கண்விழித்து பேசுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்தான், தனது இலாகாகளை ஓ.பி.எஸ்.ஸுக்கு அளிக்க உத்திரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக சசிகலா புஷ்பா பற்றிய “நமது எம்.ஜி.ஆர்.” கட்டுரையை, ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதா தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
சசிகலா புஷ்பாவும் பெண்தானே!