என்னமா யோசிக்கிறாய்ங்க…. கடலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம்…

சென்னை:

டலூரில் போலி டாஸ்மாக் டோக்கன் விநியோகம் செய்ததாக 6பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மூலம் எடுக்கப்பட்ட போலி டோக்கன் ஒன்றுக்கு ரூ.200 என குடி மகன்களிடம் விற்பனை செய்து கல்லா கட்டியது தெரிய வந்ததுள்ளது. இது தொடர்பாக 12 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தடைமீறி, டாஸ் மதுபானக் கடைகளை திறந்து, குடிமகன்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது எடப்பாடி அரசு. அதைத் தொடர்ந்து, மதுவாங்குவது தொடர்பாக 7 வண்ண டோக்கன் வழங்கப்படுவதாகஅறிவித்திருந்தது.

கடை   இன்று காலை கடை திறக்கும் முன்பே, ஏராளமானோர் அதிகாலையிலேயே டோகன் பெற கியூவில் நின்ற பரிதாபம் நிக்ழந்தது.  ஒருசில இடங்களில் இரவிலேயே சிலர் சென்று கடை முன்பு படத்து தூங்கி, காலையிலேயே டோக்கன் பெற காத்திருந்த அவலங்களும் அரங்கேறின.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இருந்தாலும்  அந்த மாவட்டம் சிவப்பு மண்டலம் இல்லாத காரணத்தால், அங்குள்ள   147 மதுபானக் கடைகளில் கொரோனா கண்டெய்ன்மென்ட் பகுதியில் உள்ள 13 கடைகள் தவிரத்து மற்ற கடைகள் அனைத்தும்  இன்று திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகின்றன.

கடலூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது வாங்குவதற்காக காலையிலேயே அதிக அளவிலான கூட்டம் கூடியது. அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை அருகில் உள்ள இரு மைதானங்களில் சமூக இடைவெளிவிட்டு அமரச் செய்தனர்.
மதுவாங்குவதற்காக அரசு அறிவித்தபடி, ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள்  என்ற முறையில், இன்று  நீலக்கலர் டோக்கன் அனைத்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கனை பெற்ற சிலர், உடனே ஜெராக்ஸ் கடைகளுக்கு சென்று கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு, மற்ற கடைகள் உள்ள பகுதிகளுக்கு சென்று, ஒரு டோக்கன் விலை ரூ.200 என பிளாக்கில் விற்பனை செய்துள்ளனர்.
இந்த டோக்கனைக் கொண்டு மதுவாங்கச் சென்றபோது, தங்களிடம் உள்ள போலி என குடி மகன்களுக்கு தெரிய வந்ததுள்ளது. இதனால் பலர் என்ன செய்வதென்று தெரியாமல், தலையில் அடித்துக்கொண்டு, மீண்டும் டோக்கன் வாங்க வரிசையில் நின்றனர்.
இதுகுறித்த டாக்மாக் கடை மேலாளரின் புகாரின் போரில்,  மதுவாங்குவதற்கான டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர். 
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஏற்கனவே குடித்து குடித்து மூளை மழுங்கி போன குடி மகன்களை மேலும் முட்டாளுக்கும் வகையில், அதிரடியாக யோசித்து, கல்லா கட்டிய அவர்களின் திறமையை பாராட்டினாலும் தகும்…