வீழும் விவசாயம்

நெட்டிசன்:

தாராபுரம் உழவர் மகேஷ் முகநூல் பதிவு

ண்ணியில்லா பஞ்சகாலத்தில் சாதாரண விவசாயக் குடும்பங்களை கஞ்சிக்கு குண்டா தூக்காமல் காப்பாற்றியது பால் உற்பத்தி தான். “ரெண்டு மாடு இருந்தா கறந்தூத்தி பொழச்சுக்குவன் ” என ஊர்ப்பக்கம் வயதான பெருசுகள் முதல் படித்து முடித்தவன் வரை சொல்லும் வாசகம். அதோடு கொஞ்சம் நடுத்தர விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு கைகொடுத்து காத்து வருகிறது.

இந்தியாவிலேயே ஏன் உலகளவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக நிலப் பங்கீடு (Land Distribute )செய்து ஓரளவு விவசாய சமநிலையை எட்டியுள்ளது. வெண்மைப் புரட்சிக்குப் பின் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. கோழிப் பண்ணைகளில் கோழி வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டபின் நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது (குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் ). இதை இரண்டையும் பறித்துவிட்டால் என்ன ஆகும் இன்றைய விவசாயிகளின் நிலை.?

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக பணையம் வைக்கப்படுகிறது இவ்விரண்டு தொழில்களும். இந்தியாவில் பால் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி செய்ய 100% என்ற கடுமையான வரி விதிப்பு இருந்து வருகிறது. ஏனெனில் உள் நாட்டு உற்பத்தியே அதிக அளவு இருப்பதும் அதிகமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதாலும் தான். ஆனால் அமெரிக்காவோ தங்கள் நாட்டு கோழி இறைச்சி, பால் மற்றும் ஆட்டோ மொபைல் துறை இன்னும் பிறவற்றிற்கான வரிவிதிப்பினை நீக்க இந்தியாவை வலியுறுத்தி வந்தது.

இதன் காரணமாக ட்ரம்ப் வருகை உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இந்தியா முதல் கட்டமாக பால் மற்றும் கோழி இறைச்சி இறக்குமதி வரியை கணிசமாக குறைக்க ஒத்துக்கொண்டதால் ட்ரெம்ப் வருகையை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. குஜராத் வரவிருக்கும் ட்ரம்பிற்கு பரிசாக இவ்வுடன்படிக்கையை இந்தியா சமர்ப்பிக்க உள்ளது.

சரி இதனால் நமக்கென்ன பாதிப்பு ..? உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம், அதுவும் பால் பண்ணை முறையில் அல்லாமல் சிறு குறு விவசாயிகள் இரண்டு , மூன்று மாடுகளை மேய்த்து பால் கறந்து ஊற்றி வருக்கிறார்கள். அமெரிக்கா, டென்மார்க் இங்கெல்லாம் விரல் விட்டெண்ண கூடிய பண்ணை அதிபர்கள் 5000, 10000 மாடுகளை பராமரித்து நவீன முறை தொழில் நுட்பத்தால் உற்பத்தியில் பாலை உற்பத்தி செய்கிறார்கள்.

தற்போது இவ் ஒப்பந்தம் கையெழுத்தானால் அப்பெரும் முதலாளிகள் முன்பு இச்சிறு விவசாயிகள் நிற்க கூட முடியாது. அவர்கள் மலிவான விலையில் கொடுக்கும் பாலிற்கு முன்னால் தண்ணி ஊற்றி பால் விற்றாலும் நம்மால் தப்பிக்க முடியாது. மற்றொன்று இறைச்சி… பதப்படுத்தப்பட்ட இறைச்சி இறக்குமதியானால் பால் விவசாயிகளுக்கு என்ன நிலைமையோ அதுவே தான் கோழிப் பண்ணை வைத்திருப்போருக்கும்.

Make in India என்று மார்தட்டி கர்ஜிக்கும் பாஜக அரசு இந்தியாவின் உற்பத்திதுறையை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்து கொண்டிருக்கிறது. திருப்பூர் கிட்டத்தட்ட அதன் அந்திமக் காலத்தில் மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. கோவை மோட்டார் தொழிலும் மகாராஷ்ட்டிரா முன் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது சாதாரண விவசாயிகளின் ஆபத்துதவி தொழிலான பால் உற்பத்தியும் பறிபோகும் நிலை உருவாகியிருக்கிறது.

தேசபக்தி தேசபக்தி என கூறிக்கொண்டு நம்முடைய கோவனத்துணி களவு போவதைக் காணாமல் இருந்தோமானால் விரைவில் வீதிக்கு வருவது நிச்சயம்.

பி-கு

நமது பாஜக நண்பர்கள் அடுத்தவர்களிடமட்டும் ஆதாரம் கேட்க்கும் பழக்கமுடையவர்கள் என்பதால் ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். வழக்கம்போல் அவர்கள் இதையெல்லாம் படிக்க மாட்டார்கள் என தெரியும் இருப்பினும் ஆதாரமற்று பேச எனக்கு சொல்லித்தரப்படவில்லை என சுட்டிக்காட்டுவது என் கடமை.

ஆதாரம்:

India offers to import US dairy, chicken legs to seal elusive trade deal with Trump

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Falling agriculture
-=-