போலி ஆவணம் தாக்கல்: சசிகலா புஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

மதுரை:

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக சசிகலாபுஷ்பா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

sasikala-pushpa

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டு பணிப்பெண் பானுமதி, தம்மை சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்களையில் மனு தாக்கல் செய்தனர்.

இதில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனின் கையெழுத்து போலியானது என கூறப்பட்டதை அடுத்து சசிகலாபுஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, சசிகலாபுஷ்பா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜரானார்.

ஐகோர்ட்டு கிளையில் நடைபெற் ஜாமின்  வழக்கு விசாரணையில், அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என தெரிய வந்தது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி,

இந்த வழக்கில் மனுதாரர்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது  தனிக்குற்றம் என்றும், அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை கே.புதூர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி