பொய்த்தகவல்: தலைமை செயலாளர் கிரிஜா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

மதுரை:

குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குட்கா முறைகேடு சம்பந்தமாக  நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மதுரையை சேர்ந்த சுந்தரேசன் என்பவர், கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, குட்கா வழக்கில், வருமான வரித்துறை சார்பில், கடிதம் அனுப்பப்பட்ட போது, கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பில் இல்லை எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விசாரண முடிவடைநத் நலையில், மதுரை உயர்நீதி மன்றம் கிளை  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.