கவுகாத்தி:

த்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  பல மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அசாமில் இன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, இதுவரை தாங்கள் பெற்ற  அரசின் விருதுகளை திருப்பி கொடுக்கப்போவதாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அரசு கொடுத்த விருதுகளுன் போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள்

சமீபத்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது,  குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய பாஜக அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டது . மாநிலங்களைவில் நிறை வேற்றப்பட வேண்டும். அங்கும் நிறைவேறி விட்டால் சட்டம் அமலுக்கு வந்து விடும்.

இந்த மசோதாவில் உள்ள ஷரத்துபடி, வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  குறிப்பாக எல்லைப்புற மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மற்றும் திரிபுரா ஆகிய 7 வட கிழக்கு மாநிலங்களிளும் புதிய குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இதன் காரணமாக, இதுவரை பாஜக கூட்டணியில் இருந்த மாநில கட்சிகள் அனைத்தும், கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ளன.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட் டத்தின்போது,  கிளர்ச்சியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசின் விருதுகளை திருப்பி வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த விருதுகளுடனேயே அவர்கள் அரசுக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட மசோதா, பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.