விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது- மத்திய அரசு

புதுடெல்லி:
விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தள்ளது.

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்குமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளதாவது: டெல்லியின் குளிர் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வீட்டிற்கு செல்லுமாறு மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியது, போராட்டத்தில் கலந்து கொண்ட பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர், பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு வலியுறுத்தியதை கேட்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு எவ்வித இழப்பீடும் கிடைக்காது என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.