திப்புசுல்தானின் போர் தளவாடங்கள் பல கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம்: பிரிட்டிஷ் அதிகாரியின் குடும்பத்துக்கு அடித்தது யோகம்

 

 

 

பெர்க்ஷைர்:

சுதந்திரப் போராட்ட வீரர் திப்புசுல்தானிடம் பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்ற போர் தளவாடங்கள் இங்கிலாந்தில் பல கோடிக்கு ஏலம் போயுள்ளன.


இந்த பொருட்களை 220 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த பிரிட்டிஷ் அதிகாரியின் வாரிசுகள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.

கடந்த 1799-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த திப்புசுல்தான் பிரிட்டிஷ் படையிடம் தோல்வியடைந்தார். அப்போது திப்பு சுல்தானின் மைசூர் அரண்மணையில் இருந்த போர் தளவாடங்களையும், அவர் பயன்படுத்திய பொருட்களையும் பிரிட்டிஷ் அதிகாரி எடுத்துச் சென்றார்.

இதில் பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் புலி என்று வர்ணிக்கப்படும் திப்பு சுல்தான் பயன்படுத்திய போர் வாளும் அடங்கும்.

திப்பு சுல்தானின் தனித்துவமான இந்த வாள் புலி வரி வடிவம் பொறிக்கப்பட்டது. மேலும், திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி கான் பயன்படுத்திய தங்க வாளும் அடங்கும்.

திப்புசுல்தான் பயன்படுத்திய தின்பண்ட பெட்டியும், அதில் உண்டு மீதம் வைத்திருந்த பருப்பும் அப்படியே இன்னும் உள்ளது.

திப்புசுல்தானின் போர் தளவாடங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரின்போது ஆங்கிலேயரின் கிழக்கிந்தி கம்பெனியின் மேஜர் தாமஸ் ஹார்ட் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்று விட்டார்.

இந்த பொருட்கள் எல்லாம் பல மில்லியன் பவுன்ட்ஸுக்கு ஏலம் போகும் என தெரிகிறது. கடந்த 2016&ம் ஆண்டு திப்புவின் மற்ற பொருட்கள் 6 மில்லியன் டாலருக்கு ஏலம் போயின.

இது குறித்து ஏல நிறுவனத்தைச் சேர்ந்த அந்தோனி க்ரிப் கூறும்போது, “திப்புவின் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது கடினமாக உள்ளது.  இதற்கு முன்பு ஏலம் விடப்பட்ட பொருட்களை விட, இப்போது ஏலம் விட இருக்கும் பொருட்கள் மிக முக்கியமானவை.

பல இடங்களிலிருந்து திப்புவின் ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு ஒரே இடத்தில் 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்து வாரிசுகள் 220 ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்துள்ளனர்.

இவர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷைர் என்ற இடத்தில் சாதாரண வீட்டிலேயே வசிக்கின்றனர். இவர்களுக்கு லாட்டரி அடித்ததுபோல், ஒரேநாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டனர்திப்பு சுல்தானின் துப்பாக்கியைப் பார்த்து அசந்துபோனேன். இதுபோன்ற துப்பாக்கியை நான் பார்த்ததில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.