குடும்பம்தான் முக்கியம்! ரஜினி 2வது நாள் பேச்சு

சென்னை,

டிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருஐகிறது.

இன்று ரசிகர்களுடன் பேசிய ரஜினி, ஒவ்வொருவருக்கும் குடும்பம்தான் முக்கியம் என்றும்,   ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பு நேற்று தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில்,  நேற்று ரசிகர்களுடன் பேசிய ரஜினி, வரும் 31ந்தேதி தனது அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரிடம் செய்தியாளர்கள்,  அரசியல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், வரும்  ‘31-ம் தேதி வரை பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தார்.

பின்னர்  ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான்.

ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

என்று கூறினார்.