கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்கு!

மிர்தசரஸ்

ந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது குடும்ப வன்முறை வழக்கௌ ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் யுவராஜ் சிங்.  ஆல்ரவுண்டரான இவர் அண்ணன் சொராவர் சிங் மற்றும் இவரது தாயார் சப்னம் சிங்.   கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானர் அகன்க்ஸா.  இவர் 2015ஆம் ஆண்டு யுவராஜ் சிங் அண்ணனான சொராவர் சிங்கை மணம் முடித்தார்.  ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழத் துவங்கினர்.

தற்போது குர்கரம் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை வழக்கு ஒன்றை அகன்க்ஸா தொடர்ந்துள்ளார்.  இவருடைய வழக்கு மனுவில் யுவராஜ் சிங்கின் அண்ணன் மற்றும் தாயார் தன்னை கொடுமை செய்து துன்புறுத்துவதாகவும் இதை தடுக்காமல் யுவராஜ் சிங் வேடிக்கை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த மனுவை வரும் அக்டோபர் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதால் நீதிமன்றம் இவர்கள் மூவருக்கும் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

திருமணமாகி ஒரு நில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து இப்போது தனித்தனியே வாழும் நிலையில் இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ளதாக யுவராஜ் சிங்கின் வழக்கறிஞர் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி