Random image

நடிகர் கேப்டன்ராஜ் மறைவு

பிரபல நடிகர் கேப்டன் ராஜ் மறைந்தார். அவருக்கு வயது 68.

மலையாளம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தென்னக மொழிபடங்களில் நடித்தவர் கேப்டன் ராஜ்.

இவர் கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழில் ஜல்லிக்கட்டு, ஜென்டில்மேன், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கேப்டன் ராஜ் தமிழில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்.

சத்யராஜ் நடித்து பிரதாப்போத்தன் இயக்கிய ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அப்படத்தில் இவர் ஏற்று நடித்த டி.எஸ்.பி கேரக்டர் மிகவும் பிரபலமானது.

கடந்த சிலகாலமாக சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனது கொச்சி வீட்டில் வசித்து வந்தார். நேற்று அங்கு மாரடைப்பால் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்க இருப்பதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.