பிரபல நடிகரின் சகோதரர் சாலை விபத்தில் பலி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் பரத் சாலை விபத்தில் பலியானார்.

 

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் பரத்.  சில படங்களிலும்  நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் ஹைதராபாத் சம்ஷாபாத் பகுதியில் உள்ள அவுட்டர் ரிங் சாலையில், தனது காரில் சென்றார். அப்போது அவரது கார் கட்டுப்பாடு இழந்து அங்கே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரத் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 45. பொதுவாகவே காரை மிக வேகமாக ஓட்டிச்செல்வது பரத்தின் வழக்கம்.   சம்பவத்தன்றும் 140 கி.மீ. வேகத்தில் காரை ஓட்டியிருக்கிறார் இவர். ஏற்கெனவே அதீத வேகத்தலில் கார் ஓட்டிச் சென்றதாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன என்று  காவல்துறை தெரிவிக்கிறது.

சமீபத்தில், ஆந்திர மாநில அமைச்சர் நாராயணாவின் மகனும், இதே போல் அதி வேகமாக  காரை ஓட்டி மின் கம்பத்தில் மோதி பலியானார்  என்பது குறிப்பிடத்தக்கது.