கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்க கோரும் பாலிவுட் நடிகர்

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் உதய் சோப்ரா கஞ்சா விற்பனையை இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரபல பாலிவுட் இயக்குனர் யஷ் சோப்ரா.   இவர் மகன் உதய் சோப்ரா பாலிவுட்டில் ஒரு பிரபல நடிகர் ஆவார்.  இவர் கடந்த 2000 ஆம் அண்டு ஷாருக்கான் நடித்த மொகபத்தின் என்னும் படத்தில் அறிமுகம் ஆனார்.   அதன் பின்னர் தூம், நீல் அண்ட் நிக்கி,  பியார் இம்பாசிபிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்த ஒரு பதிவு இந்தியா முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

உதய் தனது பதிவில், “கஞ்சா விற்பனையை இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.   இது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.   இந்த விற்பனை சட்டபூர்வமாக்கப்பட்டால் வரி மூலம் நமது அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.    கஞ்சாவுடன் சம்மந்தப்பட்ட குற்றச் செயல்கள் முழுவதுமாக ஒழிந்து போகும்.

கஞ்சாவில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளன.    இதுவரை நான் கஞ்சா உபயோகித்தது இல்லை.   அதே நேரத்தில் கஞ்சா செடிக்கு என தனி வரலாறு உண்டு.   அந்த வரலாற்றை பார்க்கும் போது இந்த கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாக்குவது நல்ல நடவடிக்கையாகவே இருக்கும்” என பதிந்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Famous bollywood actor wants Ganja sales should be legalised in India
-=-