பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை

பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார்.

கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு இசை அமைத்து வந்தனர்.  இவர்களின் முழு பெயர் நதீம் கான் மற்றும் ஷ்ரவண் ராத்தோட் ஆகும்.   இவர்கள் அப்போது இசை அமைத்த பல படங்கள் பாடல்களால் நல்ல வெற்றி அடைந்தது.  இவற்றில் ஆஷிக்கி, சாஜன், பர்தேஸ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

இதில் டி சீரீஸ் குழும தலைவர் குல்ஷன் குமார் கொலை வழக்கில் இருவரில் ஒருவரான நதீம் கான் குற்றம் சாட்டப்பட்டார்.   தற்போது வழக்கு முடிந்து நதீம் கான் துபாயில் வாசனித் திரவிய வர்த்தகம் செய்து வருகிறார். ஷ்ரவண் ராதோட் மும்பையில் உள்ளார்.

இவருக்கு நீரழிவு நோயால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.  மேலும் இதய நோய் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாகவும் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததுள்ளார்.  இவருக்கு சுமார் ௬௭ வயது ஆகிறது.

ஷ்ரவன் மரணத்துக்கு அக்ஷய் குமார், பாடகி ஸ்ரேயா கோஷல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.