பிரபல காமிக் எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ மறைந்தார்

பாரிஸ்

ஸ்டிரிக்ஸ் என்னும் காமிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் ஆல்பர்ட் உடர்ஸோ நேற்று மரணம் அடைந்தார்

காமிக் உலகில் பல கதாபாத்திரங்கள் புகழ்பெற்று உள்ளன.  அவற்றில் ஆஸ்டெரிக்ஸ் என்னும் கதாபாத்திரமும் ஒன்றாகும்.  கடந்த 1959 ஆம் வருடம் இந்த கதாபாத்திரத்தைப் பிரஞ்சு காமிக் எழுத்தாளரான ஆல்பர்ட் உடர்ஸோ மற்றொரு எழுத்தாளரான ரெனே கோஸ்சின்னி உடன் இணைந்து உருவாக்கினார்.

இந்த கதாபாத்திரம் இடம் பெறும் அனைத்து காமிக் புத்தகங்களும் உலக அளவில் புகழ் பெற்றன.   இந்த இரு எழுத்தாளர்களில் ஒருவரான கோஸ்சின்னி கடந்த 1977 ஆம் வருடம் மறைந்தார்.  அதன் பிறகும் இவர் 2011 ஆம் வருடம் வரை தொடர்ந்து கார்ட்டூன் தொடர்களைத் தயாரித்து வந்தார்.   கடந்த வருடம் இவர் எழுதிய 38 புத்தகங்கள் தொகுப்பு வெளி வந்தது.

இந்த தொகுப்பு பிரான்ஸ் நாட்டில் மட்டும் 16 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி ஒரு புதிய சாதனைப் படைத்துள்ளது.   உலகெங்கும் இவருடைய புத்தகங்கள்38 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளன.   இந்த புத்தகங்கள் லத்தின், கிரீக் உள்ளிட 111 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 1927 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25 ஆம் வருடம் பிறந்த இவர் தனது 93 வயதில் தனது இல்லத்தில் உறக்கத்தில் மரணம் அடைந்தார்.    அவருடைய மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை எனவும் வயது மூப்பு காரணமாகத் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You may have missed