பத்ம பூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் மிருணாள் சென் மரணம்

கொல்கத்தா

பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மிருணாள் சென் கொல்கத்தாவில் மரணம் அடைந்தார்.

கொல்கத்தாவில் உள்ள பவானிப்பூர் பகுதியில் வசித்து வருபவர் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் மிருணாள் சென். தற்போது 95 வயதாகும் அவர் பல முறை தேசிய விருது பெற்றுள்ளார். வங்க மொழி மட்டுமின்றி பல இந்திய மொழி படங்களுக்காகவும் அவருக்கு விருது கிடைத்துள்ளது.

இவர் பைசே ஸ்ராபன் (வங்க மொழி, 1960), பூபன் ஷோம் (இந்தி, 1969), மிர்கயா (இந்தி 976), ஒக ஊரி கதா (தெலுங்கு, 1977), அகெலர் சந்தனே (வங்க மொழி, 1980), கரிஜ், (வங்க மொழி, 1982), காந்தகார் (இந்தி 1983) ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகள் பெற்றுள்ளார். தவிர இவருக்கு பத்ம பூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதும் கிடைத்துள்ளது.

இவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி